A day at Manicks art academy
இம்மாதம் 11ஆம் தேதி திருச்சி காட்டூர் அம்மன் நகரில் இருக்கும் மாணிக்ஸ் ஆர்ட அகாடமிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுடன் குதூகலமாய் நம்மை வரவேற்றார் மாணிக்கவாசகம் ஐயா. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சிறந்த ஓவியர், பண்பாளர், திருச்சியின் நீள அகலங்களை தன் தத்துரூபமான ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்திக் கொண்டிருப்பவர், தனது ஓய்வு காலத்தில் குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவர் என இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய உண்டு. அவர் நடத்தும் ஏழு நாள் குழந்தைகளுக்கான கோடைகால ஓவிய பயிற்சி பட்டறையின் ஐந்தாவது நாளை நேரலையில் வழங்குவதற்காக சென்றிருந்தேன். எப்படி வர்றீங்க நான் வண்டி அனுப்பட்டுமா என்று முதல் நாளே அவருடைய உபசரிப்பு தொடங்கி விட்டது. சென்று சேர்ந்தவடன் மலர்ந்த புன்னகையோடு இரு கரம் கூப்பி வரவேற்று தனது கலைக்கூடத்தை சுற்றி காண்பித்தார். தத்ரூபமான ஓவியங்கள். இதுவே சரியான வார்த்தை. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி கன்னத்து தோல் சுருங்கி கண்கள் இடுங்க தலைப்பாகையோடு நம்மை ஊடுருவி பார்க்கும் கிராமத்து விவசாய...